Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டு10 மாதங்களுக்கு முன் காலாவதியான திரிபோஷா விநியோகம்

10 மாதங்களுக்கு முன் காலாவதியான திரிபோஷா விநியோகம்

10 மாதங்களுக்கு முன்னர் காலாவதியான திரிபோஷா கையிருப்பு திங்களன்று (28) தாய்மார்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான சம்பவம் கெஸ்பேவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட கஹ்பொல ரெகிதெலவத்த தாய் மற்றும் சிறுவர் சிகிச்சை மையத்தில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தரிடம் வினவிய போது, ​​குறித்த திரிபோஷா பொதிகளை எதிர்வரும் வியாழக்கிழமை மாற்றிக் கொள்வதற்கு எடுத்து வருமாறு தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை மிகவும் தவறானது எனவும் அதற்காக தாம் வருந்துவதாகவும் கெஸ்பேவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles