2023ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நாட்டில் பதிவான எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் தரவுகளுக்கு அமைய 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரு காலாண்டில் பதிவான அதிக நோயாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பதிவாகியுள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 181 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன.
இது 2023ஆம் ஆண்டின் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் ஒன்பது சதவீத அதிகரிப்பாகும். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 39 சதவீத அதிகரிப்பாகும்.
அதேநேரம் 2023ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பதிவான நோயாளர்களில், 26 ஆண்களும் மூன்று பெண்களும் 15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் எய்ட்ஸ் நோய் தொடர்பான 13 இறப்புகள் பதிவாகியுள்ளன.