புதிய சந்தைகள், வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் மூலதனத்தை ஈர்ப்பதற்காக தாய்லாந்து, இந்தோனேஷியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளின் வழிமுறைகள் பின்பற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் உள்ள போட்டியை எதிர்கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் நிலையான அபிவிருத்தி நோக்குநிலை தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய நாடுகளிடம் மேலும் உதவி கேட்பதை தவிர்த்துவிட்டு எமது நாட்டுக்கு தேவையான அபிவிருத்திகளை ஏற்படுத்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
பிராந்தியத்தில் பல நாடுகளில் செய்யப்பட்டுள்ள வளங்களைப் பயன்படுத்தி ஒரு நாடாக நாம் தனித்து நிற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.