Sunday, November 17, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டு15 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் மறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

15 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் மறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட சிறுவர் சத்திரசிகிச்சை நிபுணர், 15 வயதுடைய சிறுமியொருவர் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவத்தை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தெரிவிக்காமல் மறைத்து செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமி 14 வயதில் கர்ப்பமாகியுள்ளதாகவும், அச்சிறுமிக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் இடம்பெற்றுள்ளதகாவும் கூறப்படுகிறது.

குழந்தையுடன் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் சிறுமி பற்றி அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இந்நிலையில் சிறுமிக்கு பிரசவம் பார்த்த அறுவை சிகிச்சை நிபுணர், சிகிச்சை பிரிவுக்கு சென்று, அவர் தனது நோயாளி என்றும், அவரை சட்டப்பூர்வமாக கையாள்வது தேவையற்றது என்றும் ஊழியர்களை மிரட்டியதோடு சிறுமி கடந்த 26ம் திகதி உடனடியாக வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் உதேஸ் ரங்கா தெரிவிக்கையில்,

குழந்தை பெற்றெடுத்த சிறுமி தொடர்பில் வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதாகவும், பின்னர் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு நேற்று (28) அறிவிக்கப்பட்டதாகவும் சிறுமி வசிக்கும் பகுதியின் வைத்திய அதிகாரிக்கும் அறிவித்ததாகவும் பணிப்பாளர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles