Sunday, November 17, 2024
27.4 C
Colombo
செய்திகள்உலகம்பெண்ணின் மூளைக்குள் உயிருடன் இருந்த புழு

பெண்ணின் மூளைக்குள் உயிருடன் இருந்த புழு

அவுஸ்திரேலிய பெண்ணின் மூளைக்குள் உயிருடன் இருந்த 8 சென்டி மீட்டர் நீளம் உள்ள ஒட்டுண்ணி புழுவை மருத்துவர்கள் அகற்றி உள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 64 வயது பெண்மணி நிமோனியா, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வறட்டு இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்காக சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனை சென்றுள்ளார்.

மூன்று மாதங்கள் தொடர்ந்து மருத்துவம் பார்த்து வந்தும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை. அதனைத் தொடர்ந்து அவருக்கு ஞாபக மறதியும் மன அழுத்தமும் ஏற்பட்டுள்ளது.

இதனால், அவரின் தலையை எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்த்ததுள்ளனர். ஸ்கேன் ரிப்போர்டை பார்த்த மருத்துவர்கள் அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

அப்போது, அவரின் மூளையில் 8 செ.மீ நீளம் உள்ள ஒட்டுண்ணி புழு உயிருடன் இருந்துள்ளது.

அது ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி என்ற இனத்தைச் சேர்ந்த உருண்டைப் புழுவாகும்.

அவை அவுஸ்திரேலியா, இந்தோனேசியா, பப்புவா நியூ கினி போன்ற பிரதேசங்களில் வாழக்கூடியவை மலைப்பாம்புகளின் வயிற்றுக்குள் மட்டுமே இந்த வகையான புழு உள்ளது என்கிறனர்.

மனித மூளைக்குள் பாம்புகளின் ஒட்டுண்ணி கண்டறியப்படுவது இதுவே முதல்தடவையாகும்.

பெண் சாப்பிட்ட உணவில் எதிலாவதுஇ புழுவின் முட்டை இருந்திருக்கலாம் எனவும், அதையும் அந்தப் பெண் சேர்த்து சாப்பிட்டிருக்கக்கூடும். அதுதான் இந்த பிரச்சினைக்கு காரணமாக இருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles