Monday, June 29, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் காயம்

துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் காயம்

பங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெதியகல பகுதியில் பெண்ணொருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.

25 வயதுடைய பெண்ணொருவரே துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்துள்ள நிலையில், துப்பாக்கிச் சூட்டின‍ை மேற்கொண்ட 38 வயதுடைய குறித்த பெண்ணின் மைத்துனர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த பெண், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை மாத்தறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles