எதிர்வரும் வருடத்திற்கான எல்.பி எரிவாயு விநியோக ஒப்பந்தத்தின் மொத்த விநியோகத்தில் 50 சதவீதத்தை தற்போதைய விநியோகஸ்தரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான யோசனை ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டது.
லிட்ரோ எரிவாயு, லங்கா நிறுவனத்திற்கு 280,000 மெட்ரிக் தொன் எல்.பி எரிவாயு விநியோகிப்பதற்கான கால ஒப்பந்தம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
அதன்படி, 2024-2025 ஆம் ஆண்டுக்கான எல்.பி எரிவாயு விநியோகத்திற்கான ஏலம் கோரப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், லங்கா நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், லிட்ரோ எரிவாயு, புதிய உடன்படிக்கைகளை மேற்கொள்வது மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு பாதகமாக அமையும் என கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடையும் வரை தடையின்றி எல்.பி எரிவாயு விநியோகம் செய்வதற்கான யோசனையை ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.