Friday, March 27, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீடொன்றில் எரிந்த நிலையில் ஒருவர் சடலமாக மீட்பு

வீடொன்றில் எரிந்த நிலையில் ஒருவர் சடலமாக மீட்பு

சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலிப்பதெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலிப்பதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சுமார் மூன்று வருடங்களாக தனது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், சகோதரி வீட்டில் இல்லாத நேரத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles