சர்வதேச சந்தையில் இன்று (28) எண்ணெய் விலைகள் சற்று குறைந்தன.
சீனாவில் பொருளாதார வளர்ச்சியின் வேகம் மற்றும் எரிபொருள் தேவையைக் குறைக்கும் அமெரிக்க வட்டி விகித உயர்வுகள் போன்ற காரணங்களினால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெய் 8 சென்ட்கள் அல்லது 0.1% சரிந்து 03.30 GMT மணியளவில் ஒரு பீப்பாய் 84.40 அமெரிக்க டொலர்களாக இருந்தது.
யு.எஸ். வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) மசகு எண்ணெய் 5 சென்ட்கள் அல்லது 0.1% சரிந்து ஒரு பீப்பாய்க்கு 79.78 அமெரிக்க டொலர்களாக பதிவானது.