Monday, June 22, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீச்சல் தடாகத்தில் மூழ்கி மாணவர் மரணம்

நீச்சல் தடாகத்தில் மூழ்கி மாணவர் மரணம்

ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான மிஹிந்தலையில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் நீராடச் சென்ற மாணவர் ஒருவர் நேற்று (27) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை அவர் சக நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் நீராடச் சென்றுள்ளார்.

நீச்சல் தடாகத்தின் ஆழமான பகுதியில் மூழ்கி மாணவன் உயிரிழந்துள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மாணவர் மட்டக்களப்பு கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவராவார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles