Tuesday, June 23, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரு கைதிகளுக்கு இடையில் மோதல்: ஒருவர் பலி

இரு கைதிகளுக்கு இடையில் மோதல்: ஒருவர் பலி

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதி ஒருவரின் தாக்குதலில் காயமடைந்த மற்றுமொரு கைதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக அங்குனகொலபெலஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் சமூஹ பண்ணை பகுதியைச் சேர்ந்த நாற்பது வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 21ஆம் திகதி அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலையின் மூன்றாம் இலக்க அறையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குனகொலபெலஸ்ஸ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles