3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 3 கிலோ 95 கிராம் ஹெரோயினுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணி இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் மாத்தளை பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக கம்பளை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது இந்த ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பணி இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் நீதிமன்றத்திலிருந்து ஹெரோயினை திருடியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
