Wednesday, November 12, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிடுதியொன்றில் பெண் சடலமாக மீட்பு: சந்தேக நபரை தேடி விசாரணை

விடுதியொன்றில் பெண் சடலமாக மீட்பு: சந்தேக நபரை தேடி விசாரணை

பண்டாரவளை நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

எடம்பிட்டியவை சேர்ந்த 40 வயதான பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

களனி – கோணவலயை சேர்ந்த 50 வயதான ஒருவர் 23ஆம் திகதி ஹோட்டலுக்கு வருகை தந்துள்ளதுடன், நேற்று குறித்த பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்நபர் அவசரமாக ஹோட்டலில் இருந்து வௌியேறியதால், அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் இருவரும் தங்கியிருந்த அறையை சோதனையிட்ட போதே பெண் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதுடன், நஞ்சு அருந்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

தலைமறைவாகியுள்ள சந்தேகநபரால் எழுதப்பட்ட கடிதமொன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles