ரயில் மின்சார ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை ரயில்வே பொது முகாமையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரகாரம் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் ரயில்வே ஒழுங்குமுறை சங்கங்களும் பங்கேற்றன.
ரயில் கட்டுப்பாட்டாளரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ரயில் மின்சார ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டதையடுத்து, மின்சார ஊழியர்கள் நேற்று முதல் அவசர தொழில் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். இதனால் பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
மின்சார ஊழியர்களின் தொழில் நடவடிக்கை காரணமாக நேற்று பிற்பகல் 5 அஞ்சல் ரயில்கள் உட்பட சுமார் 20 சேவைகள் தாமதமாகச் சென்றதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.