Wednesday, November 12, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமட்டக்குளியில் இரு குழுக்களிடையில் மோதல்: ஒருவர் மரணம், பலர் படுகாயம்

மட்டக்குளியில் இரு குழுக்களிடையில் மோதல்: ஒருவர் மரணம், பலர் படுகாயம்

கொழும்பு, மட்டக்குளி பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்குளி, ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையில் நேற்று இரவு (24) இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மோதலின் போது மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்ற நிலையில், வெட்டுக்காயங்களுடன் வீதியில் கிடந்த நபரை கொண்டு சென்ற பின் அவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, காயமடைந்த மற்றுமொருவரான 28 வயதுடைய இளைஞர் சிகிச்சைக்காக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles