கொழும்பு மாவட்டத்தில் 70 சதவீதம் வளி மாசடைவதற்கு வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் புகையே காரணம் என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணைக்குழுவின் ஆணையாளர் நிசாந்த அனுருத்த தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் வாகனத்தை செலுத்தும் போது அதிலிருந்து வெளியேற்றப்படும் புகையினை அளவிடுவதற்கு திட்டம் ஒன்று தயாரிக்கப்படும்.
மேலும் அதிகமான புகை வெளியேற்றத்துடன் வாகனங்கள் பயணிக்கும் பட்சத்தில் அதனை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் செயலிக்கு அனுப்பிவைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
குறித்த புகைப்படத்திற்கு அமைவாக வாகன உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.