யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு வீட்டின் முன்பாக சிலர் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளமையால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு இல்லைத்தை இன்று(25) சுற்றிவளைக்க சிலர் திட்டமிட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் ஆதரவு வழங்கியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா சபையில் தெரிவித்திருந்தார்.