இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மீன் உற்பத்திகளை இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய சந்தைக்கு ஏற்றவாறு புதுப்பித்ததன் மூலம் மீன்பிடி கூட்டுத்தாபனங்கள் உணவு மற்றும் பொருட்கள் விநியோக சேவைகள் மூலம் மீன் உற்பத்திகளை நுகர்வோருக்கு பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.