Wednesday, November 20, 2024
25.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் சிறுபான்மை சமூகங்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவது அவசியம்

இலங்கையில் சிறுபான்மை சமூகங்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவது அவசியம்

இலங்கையில் நிரந்தர சமாதானத்தை உறுதிப்படுத்த இராணுவம் சிறுபான்மை சமூகங்களுடன் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் குறித்து அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இலங்கை இராணுவத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.பி.அமுனுகமவை யாழ்ப்பாணத்தில் சந்தித்த போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இராணுவத்தை நவீனமயமாக்குவதற்கான இலங்கையின் முயற்சிகள் உட்பட பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்ட தூதுவர் யாழ்ப்பாணத்தில் உள்ள சிவில் சமூகத் தலைவர்கள் உட்பட பலதரப்பட்ட சமூகங்களைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

இந்தநிலையில் ஜனநாயக இலங்கைக்காக ஒன்றிணைந்து செயல்படுவதற்கு ஆற்றல்மிக்க குரல்களும் பங்காளிகளும் அவசியம் என தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles