ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவுக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் சங்கம் முன்வைத்துள்ள வழக்கு தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு எதிராக பொய்யான மற்றும் அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.
2022 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற வு20 உலகக் கிண்ண (ஆண்கள்) கிரிக்கெட் போட்டித் தொடரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக தேசிய கணக்காய்வு அலுவலகம் நடத்திய விசேட கணக்காய்வு அறிக்கை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அதில் உள்ள உண்மைகளை வெளிப்படுத்தியதை அடுத்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.