Saturday, August 9, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹெரோயின் வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்

ஹெரோயின் வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்

ஹெரோயின் வைத்திருந்த போது கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பணி இடைநிறுத்தம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பொல்பிட்டிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 16ஆம் திகதி இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மன்னார் பொலிஸ் பிரிவில் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த போதே மன்னார் பிரிவின் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles