விமானப் பயணிகளின் நெரிசலை குறைப்பதற்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்காலிக முனையத்தை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த முனையத்தை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 06 மாதங்களுக்குள் அதனை முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது முனையத்தில் சுமார் 25,000 பயணிகள் பயன்படுத்துவதாகவும், இதற்கு தீர்வாக இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும், அதுவரை தீர்வாக இந்த தற்காலிக முனையத்தை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.