10 வயது சிறுவன் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளது.
நவமெதகம – தியவிட்டகம பிரதேசத்தை சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சிறுவனும்அவரது தம்பியும் தந்தையுடன் பயிர்களை அறுவடை செய்வதற்காக வயலுக்குச் சென்ற போது மழை பெய்ய தொடங்கியுள்ளதுடன், அதனால் இருவரும் மரத்துக்கு அடியில் இருந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திடீரென மரத்தின் மீது மின்னல் தாக்கியதில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும், கடும் அதிர்ச்சிக்கு உள்ளான அவரது தம்பி மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.