போலி விசாவை பயன்படுத்தி டுபாய் ஊடாக கனடாவுக்கு செல்ல முயற்சித்த ஒருவர் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பல சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணையின் போது, தரகர் ஒருவருக்கு குறித்த நபர் 45 இலட்சம் ரூபா பணத்தை செலுத்தி போலி விசா அனுமதி பத்திரத்தை தயாரித்துள்ளமை தெரியவந்துள்ளது.