Wednesday, August 6, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து - மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி

பேருந்து – மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி

மட்டக்களப்பு, வாழைச்சேனையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று(23) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் ஓட்டமாவடியைச் சேர்ந்த 25 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles