Wednesday, August 6, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகட்டுநாயக்க விமான நிலையம் சென்ற சொகுசு பேருந்து தீக்கிரை

கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற சொகுசு பேருந்து தீக்கிரை

யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி சென்ற சொகுசு பேருந்து நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்தது.

இச்சம்பவம் இன்று (24) அதிகாலை 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி சென்ற சொகுசு பேருந்து ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.

பேருந்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, வேறு வாகனங்களில் அவர்கள் விமான நிலையம் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நீர்கொழும்பு தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை கட்டுப்பாடுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த தீ விபத்து காரணமாக பேருந்து முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கொச்சிக்கடை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles