Wednesday, December 17, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயரடுக்கு பாதுகாப்புக்காக 7,693 பொலிஸ் அதிகாரிகள் சேவையில்

உயரடுக்கு பாதுகாப்புக்காக 7,693 பொலிஸ் அதிகாரிகள் சேவையில்

உயரடுக்கு பாதுகாப்புக்காக 7,693 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

நேற்று (23) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்களுக்காக 563 அதிகாரிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 1,811 உத்தியோகத்தர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்காக 2,176 அதிகாரிகளும் பணிபுரிவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள், முன்னாள் பிரதி அமைச்சர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், ஆளுநர்கள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர், ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களல்லாத உயரடுக்கு பிரிவைச் சேர்ந்தவர்கள் என அமைச்சர் கூறினார்.

இலங்கையில் 86537 பொலிஸ் அதிகாரிகளும் 1085 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles