Sunday, August 3, 2025
26.1 C
Colombo
செய்திகள்விளையாட்டுசிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்

சிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்

சிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்.

ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 49 ஆவது வயதில் காலமானார்.

முன்னாள் வீரர் ஹென்றி ஒலங்கா இந்த துயரச்செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஹீத் ஸ்ட்ரீக் சிம்பாப்வே அணிக்காக முதன்முதலாக டெஸ்ட்போட்டிகளில் 100 விக்கெட்களை கைப்பற்றியவர் என்ற சாதனைக்குரியவர் – ஹீத் ஸ்ட்ரீக்216 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தியிருந்தார் – சிம்பாப்வே அணிக்காக 65 டெஸ்ட்கள் மற்றும் 189 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடியிருந்தார்.

2001 இல் நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இவர்67 பந்துகளில் பெற்ற 79 ஓட்டங்கள் சிம்பாப்வே போட்டியில் வெற்றிபெற்று தனது முதலாவது ஒருநாள் தொடர் வெற்றியை பெறுவதற்கும் காரணமாகஅமைந்தது.

சிம்பாப்வே பங்களாதேஸ் அணிகளுக்கும் கொல்கத்தா அணிக்கும் ஸ்ட்ரீக்பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுள்ளார்.

எனினும் சிம்பாப்வே அணியின் பயிற்றுவிப்பாளராக பணியாற்றியவேளை ஊழலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 2021 இல் இவருக்கு 8 வருட தடை விதிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles