Wednesday, November 20, 2024
28.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி - சரத் வீரசேகர

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி – சரத் வீரசேகர

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி எனவும், அவ்வாறானவர்களால் முறையாக செயற்பட முடியாதததால் முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு வேறொரு நீதிபதியை நியமிக்க வேண்டும் என்பதை நீதியமைச்சிடம் வலியுறுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (22) இடம்பெற்ற சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குருந்தூர் மலையில் கை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கு எல்லையுண்டு. அதை கோழைத்தனம் என்று கருத வேண்டாம்.

குருந்தூர் மலையில் பொங்கல் பொங்கும் இந்து மத வழிபாட்டில் ஈடுபட முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

தொல்பொருள் கட்டளைச்சட்டத்துக்கு எதிராகவே முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி செயற்படுகிறார்.

தொல்பொருள் கட்டளைசட்டத்தில் பௌத்தர்களின் மனங்களை பாதிக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க கூடாது. அவ்வாறான செயற்பாடுகள் தண்டனைக்குரிய குற்றம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான தெளிவான கட்டளைச்சட்டங்கள் காணப்படுகின்றன நிலையில் நீதிபதி தவறான கட்டளைகளை பிறப்பித்துள்ளமை பெரும் பிரச்சினையாக உள்ளது என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles