விற்பனை மற்றும் அரச வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மதுபானங்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.
மதுபானங்களின் விலையை உயர்த்தினால், அரசுக்கு வருமானம் அதிகரிக்கும்.
விலை குறைக்கப்பட்டால் அதிகமான மக்கள் மதுபானங்களை வாங்குவார்கள்.
அதிகமான மக்கள் மதுபானங்களை வாங்கும்போது வரி வருவாய் அதிகரிக்கலாம். இல்லை என்றால் இலங்கையில் மதுவிலக்கு மற்றும் கலால் திணைக்களத்தை மூட வேண்டியிருக்கும் என டயனா கமகே குறிப்பிட்டுள்ளார்.