Wednesday, November 20, 2024
27.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநுவரெலியா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன

நுவரெலியா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன

மயக்க மருந்து தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று முதல் அமுலாகும் வகையில் சாதாரண சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அத்துடன், அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சுகாதார தொழிற்சங்க சம்மேளனங்கள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளன.

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் ஐசோப்ளோரின் மற்றும் சியோப்ளோரின் போன்ற மயக்கமருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக குறித்த சங்கத்தின பொதுச்செயலாளர் எஸ்.பீ.மெதிவத்த தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக சாதாரண சத்திர சிகிச்சைகள், நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles