ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவின் தன்னிச்சையான முடிவினால் சேனல் ஐ அலைவரிசை லைகா நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று (22) நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், லைக்கா மொபைலுக்கு ஐ-சேனலை 6 மாத காலத்திற்கு வாடகை அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்டதாக கூறினார்.
தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சேனல் ஐ அலைவரிசை குத்தகைக்கு விடப்படவில்லை என்றும், சேனல் ஐ அலைவரிசையின் ஒளிபரப்பு நேரம் ஆறு மாதங்களுக்கு குத்தகைக்கு விடப்படாமல், 150 மில்லியன் ரூபா மாதாந்த வாடகை அடிப்படையில் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாவும், 75 மில்லியன் ரூபா முன்பணமாக பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.