நேற்று (22) சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சிறைக் கைதி ஒருவரிடம் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் நான்கு சிறிய பொதிகள் சிறை அதிகாரிகளால் மீட்கப்பட்டன.
பின்னர் இது தொடர்பில் காலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அதிகாரிகள் குழுவொன்று வந்து பரிசோதித்த போது அந்த பார்சல்களில் 4 கிராம் 40 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 3710 மில்லிகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் சிறைச்சாலை ஊடாக காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.