Sunday, June 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுளவிக் கொட்டுக்கு இலக்கான ஒருவர் மரணம்

குளவிக் கொட்டுக்கு இலக்கான ஒருவர் மரணம்

திருகோணமலை, வெருகல் பகுதியில் நேற்று (22) குளவிக் கொட்டுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெருகல் – மாவடிச்சேனை கிராமத்தில் வசிக்கும் 30 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பனை ஓலை வெட்டுவதற்காக பனை மரத்தில் ஏறிய வேளையிலேயே, மரத்திலிருந்த குளவிகள் இவரை கொட்டியுள்ளன.

இதனால் காயமடைந்த அவர், சிகிச்சைக்காக கதிரவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டு. வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் நிலையில் உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles