Monday, February 16, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்சார சபையின் சர்ச்சைக்குரிய பதவி உயர்வு: அறிக்கை கோரும் அமைச்சர்

மின்சார சபையின் சர்ச்சைக்குரிய பதவி உயர்வு: அறிக்கை கோரும் அமைச்சர்

இலங்கை மின்சார சபையின் (CEB) பெண் உத்தியோகத்தர் ஒருவர் ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக அவருக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று காலை நடைபெற்ற இலங்கை மின்சார சபை தலைவர், பொது முகாமையாளர் மற்றும் பணிப்பாளர்களுடனான சந்திப்பின் போது இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜேசேகர தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

CEB இல் சிரேஷ்ட முகாமைத்துவத்திற்கான பதவி உயர்வுகள் தொடர்பாக அமைச்சின் அனுமதியைப் பெற்று 2020 இல் எடுக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த சபை தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மின்சார சபையின் சீர்திருத்த நடவடிக்கைகள், மின் உற்பத்தித் திட்டங்கள், சொத்துக்கள் முகாமைத்துவம், நிர்வாக மற்றும் செயற்பாட்டுச் செலவுகளைக் குறைத்தல் மற்றும் CEB தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles