Monday, August 18, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாளாந்தம் 170 பேர் மாரடைப்பால் பாதிப்பு

நாளாந்தம் 170 பேர் மாரடைப்பால் பாதிப்பு

இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 170 பேர் மாரடைப்பினால் பாதிக்கப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் விசேட வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் கடந்த 10 வருட காலமாக மாரடைப்பினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இது தற்போது உட்கொள்ளும் உணவு முறைமை காரணமாகவே ஏற்படுகின்றது.

சீனி மற்றும் எண்ணெய் அளவு உணவில் அதிகரிப்பதனாலும் இந்த நிலைமை ஏற்படுகின்றது. சிலர் மூன்று வேளையும் சோறு உட்கொள்கின்றனர். இதுவும் பாரிய சிக்கலை ஏற்படுத்துகின்றது.

எனவே மக்கள் தாம் உட்கொள்ளும் உணவு குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles