தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா (Thaksin Shinawatra), 15 ஆண்டுகள் நாடுகடத்தப்பட்டு நாடு திரும்பிய நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார்.
தாயகம் திரும்பிய பின்னர் உடனடியாக கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதிகார துஷ்பிரயோகம், சட்டவிரோதமாக அரசு நடத்தும் வங்கிக்கு வெளிநாட்டுக் கடனை வழங்க உத்தரவிட்டது போன்ற பல குற்றவியல் குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
புகழ்பெற்ற அரசியல் வம்சத்தின் தலைவரும், மான்செஸ்டர் சிட்டி கால்பந்து கழகத்தின் முன்னாள் உரிமையாளருமான தக்சின், 2001 ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார்.
2006 ஆம் ஆண்டு நியூயோர்க்கில் நடந்த ஐ.நா கூட்டத்தில் கலந்து கொண்ட போது இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி நீக்கம் செய்யப்படும் வரை பிரதமராக இருந்தார்.