நாடாளுமன்றம் இன்று (22) முதல் 25ஆம் திகதி வரை கூடவுள்ளது.
அதன்படி, தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் கீழான உத்தரவுகள் மற்றும் சுற்றுலா சட்டத்தின் கீழான விதிமுறைகள் மீதான விவாதம் இன்று நிறைவேற்றப்படவுள்ளது.
அத்துடன், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான ஒழுங்குமுறைகள், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான உத்தரவுகள், துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான உத்தரவுகள் மற்றும் மூலோபாய அபிவிருத்திச் சட்டத்தின் கீழான உத்தரவுகள் மீதான விவாதம் நாளை நடைபெறவுள்ளது.
அத்துடன் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது.