2020 ம் ஆண்டு தேர்தலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்கு தயார் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் வியாழக்கிழமை ஜோர்ஜியாவில் முன்னிலையாகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஜோர்ஜியா மாநிலத்தில் தம்மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என டொனால்ட் ட்ரம்ப் முன்னதாக அறிவித்திருந்தார்.
கடந்த சில மாதங்களில் அவர் மீது சுமத்தப்பட்ட நான்காவது குற்றவியல் வழக்கு இதுவாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.