Wednesday, April 29, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டன

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டன

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது கண்டெடுக்கப்பட்ட 1000க்கும் மேற்பட்ட வாள்களை நீதிமன்ற உத்தரவின்படி, பாதுகாப்புப் படையினர் ஆழ்கடலில் மூழ்கியுள்ளனர்.

இதன்படி, ரங்கல கடற்படை முகாமில் இருந்து 17 கடல் மைல் தொலைவில் உள்ள 1000 அடி ஆழமான கடலில் ஆயுதங்கள், வெடிகுண்டு துண்டுகள், 8 துப்பாக்கிகள், 10 கல் வெட்டு துப்பாக்கிகள் உள்ளிட்ட பல பொருட்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸின் உத்தரவுக்கமைய, கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க, நீதிமன்றப் பதிவாளர், வழக்குப் பொருட்கள் அறையின் பாதுகாவலர் உள்ளிட்ட நீதித்துறை ஊழியர்கள் குழுவினர் இணைந்து வாள்கள் மற்றும் கத்திகளை ஆழ்கடலில் மூழ்கடித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles