கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 8 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.
மருத்துவமனையில் ஊசி போடப்பட்டதால் குழந்தை கவலைக்கிடமாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் 4 ஆம் திகதி காய்ச்சல் காரணமாக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, மேலதிக சிகிச்சைக்காக ஆகஸ்ட் 5 ஆம் திகதி கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.
அங்கு செலுத்தப்பட்ட ஊசிமூலம் உடல்நிலை பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்ததாக குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இன்று (21) விளக்கம் அளிக்கப்படும் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.