தனியார் மருந்தகம் ஒன்றில் பெறப்பட்ட மருந்தை உட்கொண்டு பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இங்கிரிய – உருகல பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் நீரிழிவு, கொலஸ்ட்ரோல் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான மருந்துகளை பயன்படுத்தும் பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் மருந்தகம் ஒன்றில் இருந்து பெற்றுக் கொண்ட மருந்தை கடந்த 10 ஆம் திகதி வரைஉட்கொண்ட அவர், அதனை தொடர்ந்து இங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பெண் நேற்று (20) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.