திருகோணமலை துறைமுகம் மற்றும் நிலாவெளி புறாத்தீவை பார்வையிடும் கடல் பயணங்களை மீள ஆரம்பிக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது நேற்று (19) முதல் முன்னோடி திட்டமாக ஆரம்பிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்படி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், பாடசாலை மாணவர்கள், கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் திருகோணமலை இயற்கை துறைமுகம், நிலாவெளி புறா தீவின் பவளப்பாறைகளை பார்வையிட பாதுகாப்பான மற்றும் மலிவு விலையில் கப்பல் வசதிகளை வழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.