மாற்றுத்திறனாளிகளுக்காக இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களுக்கான அனைத்து வரிகளையும் நீக்குவதற்கான பிரேரணை இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார்.
இந்த வரிகளை அறவிடுவதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி,மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் செயற்கை கால்கள், செயற்கை கைகள், வெள்ளை குச்சிகள், செவிபுலன் கருவிகள் உள்ளிட்ட 86 சாதனங்களுக்கான வரி நீக்கப்பட உள்ளது.