கொழும்பு செட்டியார்த் தெருவில் தங்க விலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இல்லை என்று நகை வர்த்தகர்கள் அறிவித்துள்ளனர்.
இதன்படி 24 கரட் தங்கம் ஒரு பவுன் 166,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 154,000 ரூபாவாகவும் நிலவுகிறது.
அதேநேரம் உலக சந்தையில் தங்கத்தின் விலை ஸ்திரநிலையில் உள்ளது.
இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் 1,889 டொலர்களாக நிலவுகிறது.
கடந்த 30 நாட்களில் தங்கத்தின் நிலையானது 65 டொலர்கள் வீழ்ச்சியடைந்துள்ளது.