செய்திகள்உள்நாட்டு2 கிலோ கொக்கெய்னுடன் வெளிநாட்டு பிரஜை கைது

2 கிலோ கொக்கெய்னுடன் வெளிநாட்டு பிரஜை கைது

கடந்த 16 ஆம் திகதி 2 கிலோ 294 கிராம் கொக்கெய்னுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் நாரஹேன்பிட்டியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 28 வயதான பிலிப்பைன்ஸ் பிரஜையாவார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், நேற்று (17) சந்தேகநபரிடம் போதைப்பொருள் பெறுவதற்காக காரில் விடுதிக்கு வந்த நபர் 7 இலட்சம் ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கிருலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடையவராவார்.

மேலும்இ வெளிநாட்டில் உள்ள முக்கிய போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நபர் இந்த போதைப்பொருட்களை கொண்டு செல்ல வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான வெளிநாட்டு பிரஜையை நேற்று (17) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டன. மற்றைய சந்தேக நபர் மாளிகாகந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles