Thursday, February 12, 2026
23.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டு13 வயது சிறுமியை வன்புணர்ந்த 15 வயது சிறுவர்கள் நால்வர் கைது

13 வயது சிறுமியை வன்புணர்ந்த 15 வயது சிறுவர்கள் நால்வர் கைது

13 வயதுடைய பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த 15 வயதுடைய நான்கு பாடசாலை மாணவர்களை மணம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நான்கு பாடசாலை மாணவர்களும் மனம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பள்ளி மாணவியுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.

குறித்த மாணவன் சிறுமியை ஏமாற்றி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று தனது நண்பர்களுடன் சேர்ந்து துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மானம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles