பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தை ஒன்று மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் பின்புறம் கைவிடப்பட்டுள்ளது.
குழந்தையின் தாய் என்ற சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிராந்துருகோட்டே பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தையை பிரசவித்த பின்னர் வைத்தியசாலையின் பின்புறம் கொண்டு வந்ததாக குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் விட்டுச் செல்லப்பட்ட குழந்தை வைத்தியசாலையின் விசேட சிறுவர் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.