Wednesday, July 30, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை 18 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை 18 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை (19) காலை 08 மணி முதல் மறுநாள் (20) அதிகாலை 2 மணி வரை 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மின்சார சபையின் பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு விநியோகிக்கப்படும் மின்சார விநியோகம் தடைப்படுதல் மற்றும் அத்தியாவசிய உள்ளக விஸ்தரிப்பு பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டே, கடுவலை நகரசபை பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ பிரதேச சபை பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபை பகுதிகள், இரத்மலானை மற்றும் கட்டுப்பெத்த ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles