கஹவத்தை, கட்டங்கே பகுதியில் உள்ள இரத்தினக்கல் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட நீலக்கல் ஒன்று ஏலத்தில் 43 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
‘ப்ளூ சஃபையர்’ எனப்படும் இந்த வகை நீலக்கல் 99 கரட் என்று இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் மேற்பார்வையில் கஹவத்த பிரதேசத்தில் இந்த விலைமதிப்பற்ற நீலக்கல் ஏலம் விடப்பட்டது.